Madurai News

சென்னை அணியின் பயிற்சியாளராகும் பாலாஜி!
Saturday 20, Jan 2018

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக, முன்னாள் வேகப்பந்துவீச்சாளர பாலாஜி நியமிக்கப்பட்டார் . இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்.,) நடக்கிறது. இது வெற்றிகரமாக 11வது ஆண்டில் அடி எடுத்து வைக்கவுள்ளது. இந்த ஆண்டில் சுமார் 2 ஆண்டு தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கவுள்ளது. இதில் சென்னை அணி, தங்களின் ஆஸ்தான வீரர்களான தோனி, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைத்தது. முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்டீவன் 0 பிளமிங் தலைமை பயிற்சியாளராக தொடர்வார் என்றும் அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last