Madurai News

டோனி- வீராட்கோலி ஒருவரை ஒருவர் மிகவும் மதிக்க தெரிந்தவர்கள் ரவிசாஸ்திரி
Wednesday 01, Jul 2015

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வங்காள தேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதன் ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி முதல் முறையாக இழந்தது.இதனால் கேப்டன் டோனிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்திய அணிக்கு நல்லது ந டக்குமானால் கேப்டன் பதவியில் இருந்து விலக தயார் என்று டோனி வெளிப்படையாக அறிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. வீரர்கள் தேர்வில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணியை சேர்ந்தவர்களுக்கு டோனி முக்கியத்துவம் கொடுப்பதாக கூறி வீராட்கோலி அதிருப்தி அடைந்ததாகவும், இது தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் இருப்ப தாகவும் தகவல் வெளியாகின. இந்த நிலையில் டோனி- கோலி இடையே பிளவு எதுவும் இல்லை என்று இந்திய அணியின் இயக் குனரும், முன்னாள் கேப்டனுமான ரவிசாஸ்திரி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- டோனி-கோலி இடையே கருத்து வேறுபாடு நிலவு வதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் ஏற்புடையது அல்ல. இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் மதிக்க தெரிந்தவர்கள். இதன் காரணமாக கடந்த ஆண்டில் நடைபெற்ற போட்டிகளில் நாம் 70 சதவீதம் வெற்றி பெற்று இருக்கிறோம். இதில் இருந்து இருவருக்கும் உள்ள மதிப்பைப தெரிந்து கொள்ள வேண்டும். இளம் வீரரான வீராட் கோலி தனது அனுபவத்தில் இருந்து பல விஷயங்களை கற்று வருகிறார். அவருக்கு தற்போது 26 வயதாகிறது.அடுத்த ஒன்று அல்லது 2 ஆண்டுகளில் அவர் தலைமைப் பண்புக்கு ஏற்ற வகையில் மாறி விடுவார். டோனியை பொறுத்த வரை அவர் எப்போதுமே சிறந்த வீரர். அவர் தனது பாணியில் தான் எப்போதுமே விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலகியதே அதற்கு மிக சிறந்த உதாரணமாகும். பொதுவாக வீரர்கள் 100 டெஸ்ட் வரை விளையாடுவதில் ஆர்வம் உள்ளவர்கள் என்பது எனக்கு தெரியும். தற்போது உள்ள இந்திய அணியின் பந்து வீச்சில் பலவீனமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆடுகளத்துக்கு ஏற்ற வகையிலான பந்து வீச்சாளர்களை அடையாளம் காணுவது அவசியமாகும்.இலங்கை, தென் ஆப்பிரிக்கா தொடர் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்.இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last