Madurai News

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அரை மொட்டை அடித்து சர்ச்சைக்குரிய விளம்பரம், வங்காளதேசம் பத்திரிக்கை வெளியிட்டது
Tuesday 30, Jun 2015

டாக்கா, இந்திய கிரிக்கெட் வீரர்களை அவமானப்படுத்தும் முயற்சியாக, இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு அரைமொட்டை அடித்து வங்காளதேச பத்திரிக்கை சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டு உள்ளது. வங்காளதேசத்தில் சுற்றுபயணம் செய்த இந்திய அணி, மிர்புரில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெற்றது. இதில் இந்தியா நிர்ணயித்த 318 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேசம் 47 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. என்றாலும் வங்காளதேச அணி இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. வங்காளதேச அணியின் திடீர் எழுச்சி கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக அந்த அணி தொடரை வென்றது இதுவே முதல் முறையாகும். இந்த குறுகிய கால சுற்றுப்பயணம் இந்தியாவுக்கு பெருத்த ஏமாற்றத்தில் முடிந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இதனையடுத்து உலகின் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்று வங்காளதேச கேப்டன் மோர்தசா கூறியுள்ளார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களை அவமானப்படுத்தும் முயற்சியாக, இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு அரைமொட்டை அடித்து வங்காளதேச பத்திரிக்கை சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டு உள்ளது. புரோதோம் ஆலோ என்ற வங்காளதேசத்தை சேர்ந்த வாரநையாண்டி பத்திரிகை, இந்த வேலையை பார்த்து உள்ளது. பத்திரிக்கையில் இடம்பெற்று உள்ள புகைப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரெகானே, ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிந்தர் ஜடேஜா, எம்.எஸ். டோனி, ஷிகர் தவான் மற்றும் அஸ்வின் படத்தை அரை மொட்டை தோற்றத்துடன் வெளியிட்டு உள்ளது. “நாங்கள் பயன்படுத்திவிட்டோம்... நீங்களும் பயன்படுத்த முடியும்,” என்று புகைப்படத்துடன் கூடிய பேனரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பேனரில் போட்டியில் அபாரம் காட்டிய வங்காளதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிஜூர் கத்தியுடன் உள்ளபுகைப்படமும் இடம்பெற்று உள்ளது. முஸ்தாபிஜூர் இவர்களது அரை தலையில் இருந்த முடியை நீக்கிவிட்டார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. “இந்த டைகர் ஸ்டேஷனரி, வங்காளதேசத்தில் தயாரிக்கப்பட்டது, முஸ்தாபிஜூர் ‘கட்டர்’ ஸ்டேடியம் மார்க்கெட், மிர்பூர், டாக்காவில் கிடைக்கும்,” என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களை இவ்வாறு சித்தரித்து வங்காளதேசம் பத்திரிக்கையானது சர்ச்சைக்குரிய விளம்பரம் வெளியிட்டு உள்ளது சமூக வலைதளங்களியில் இருநாடுகளை சேர்ந்த ரசிகர்களின் மோதலுக்கு வழிவகைசெய்து உள்ளது.

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last