Madurai News

ரஹானே எங்களுக்கு பெருமை சேர்ப்பார் என நம்புகிறேன் -சச்சின் தெண்டுல்கர்
Tuesday 30, Jun 2015

இந்திய கிரிக்கெட் அணி வருகிற 7–ந் தேதி முதல் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு டெல்லியில் நேற்று நடந்தது. தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் தலைமையில் தேர்வாளர்கள் கூடி ஆலோசித்து அணியை தேர்வு செய்து அறிவித்தனர். சீனியர் வீரர்கள் அதிகம் இல்லாத இரண்டாம் தர இந்திய அணிக்கு கேப்டனாக மராட்டியத்தை சேர்ந்த 27 வயதான ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். ரஹானே 15 டெஸ்ட், 55 ஒருநாள் மற்றும் 21 இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். இரண்டாம் தர இந்திய அணிக்கு கேப்டனா நியமிக்கபட்டு உள்ள ரஹானேவுக்கு சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்து உள்ளார். சச்சின் கூறியதாவது:- ரஹானே நியமிக்கபட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் நேர்மையான மற்றும் கடினமாக உழைக்க கூடிய கிரிக்கெட் வீரர்.அவர் இந்த பொறுப்பை சிறப்பாக செய்வார் என உறுதி அளிக்கிறேன். அவர் எங்களுக்கு பெருமை சேர்ப்பார் என நம்புகிறேன்.அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last