Madurai News

தரவரிசையில் அஸ்வின் முன்னேற்றம்
Friday 26, Jun 2015

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.). ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா) முதலிடத்தில் தொடருகிறார். இந்திய தரப்பில் விராட் கோலி 4-வது இடத்திலும், கேப்டன் டோனி 8-வது இடத்திலும் உள்ளனர். வங்காளதேச தொடரில் அதிக ரன்கள் (மொத்தம் 158 ரன்) எடுத்தவரான இந்திய வீரர் ஷிகர் தவான் ஒரு இடம் குறைந்து 7-வது இடத்திற்கு இறங்கியுள்ளார். ஏனெனில் இங்கிலாந்து தொடரில் அசத்திய நியூசிலாந்து வீரர் கனே வில்லியம்சன் 7-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு வந்து இருக்கிறார். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தில் நீடிக்கிறார். வங்காளதேச தொடரில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் அஸ்வின் 2 இடங்கள் உயர்ந்து 10-வது இடத்தை பிடித்துள்ளார். டாப்-10 இடத்திற்குள் அங்கம் வகிக்கும் ஒரே இந்திய பவுலர் இவர் தான்.

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last