Madurai News

21ம் நூற்றாண்டின் மிக சிறந்த் டெஸ்ட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆஸ்திரேலிய ரசிகர்கள் தேர்வு செய்தனர்
Thursday 25, Jun 2015

மெல்போர்ன், - 21-ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் யார் என்பது பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரபூர்வ இணைய தளம் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் இந்திய கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் தெண்டுல்கர் 21-ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் வீரராக ரசிகர்கள் தேர்வு செய்து உள்ளனர். அவருக்கு 23 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளது. 24 ஆண்டு காலம் சர்வதேச போட்டியில் விளையாடிய தெண்டுல்கர் 200 டெஸ்டில் விளையாடி உள்ளார். 15,921 ரன் எடுத்துள்ளார். 51 சதம் அடங்கும். 2000-ம் ஆண்டுக்கு பிறகு அவர் 127 டெஸ்டில் 10,080 ரன் எடுத்தார். சராசரி 52.22 இந்த கால கட்டத்தில் அவர் 29 செஞ்சூரி அடித்து இருந்தார். இதன்மூலம் தெண்டுல்கர் புகழ் இன்னும் மங்காமல் இருப்பதையே இது காட்டுகிறது. இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு 14 சதவீத ஓட்டுகள் கிடைத்தது. ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் 13 சதவீதம் வாக்கு பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளார். ரிக்கிபாண்டிங் (ஆஸ்திரேலியா) 4-வது இடத்தையும், காலிஸ் (தென்ஆப்பிரிக்கா) 5-வது இடத்தையும் டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா) 6-வது இடத்தையும், வார்னே (ஆஸ்திரேலியா) 7-வது இடத்தையும், மெக்ராத் (ஆஸ்திரேலியா) 8-வது இடத்தையும், முரளீதரன் (இலங்கை) 9-வது இடத்தையும், ஸ்டெயின் (தென்ஆப்பிரிக்கா) 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last